அரியர் மாணவர்கள் அனைவரும் பாஸ்: சென்னை பல்கலை அறிவிப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (17:32 IST)
அரியர் வைத்த பொறியியல் மாணவர்களை தேர்ச்சி செய்வது குறித்த சர்ச்சை அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தமிழக அரசுக்கும் இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் அரியர் மாணவர்கள் உள்பட 1.2 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதிய கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்ச தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு செய்தது என்பதும் இதனை அடுத்து தமிழக அரசுக்கு அரியர் மாணவர்களின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்