பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Mahendran

செவ்வாய், 13 மே 2025 (10:48 IST)
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உள்நடப்பு முறையில் கடுமையான தீர்ப்பை வெளியிட்டது.
 
பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஏமாற்றி கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மேற்கொண்டு, அதற்கான வீடியோக்களை பதிவு செய்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கிய சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது.  
 
இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்தது. அதன் பின்னணியில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது 2019ம் ஆண்டு மே 21 அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
வழக்கு விசாரணைக்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு ‘இன்கேமரா’ முறையில் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகள், வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் அறிவித்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பின் முழு விவரங்கள், தண்டனை விவரங்கள் தெரிய வரும்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்