தமிழகத்தில் மதுபானம் ஆறாக ஓடுகிறது – நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:23 IST)
தமிழகத்தில் அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு  கொரோனா காலத்தில் மட்டுமே நீதிமன்றத் தலையீட்டால் சிறிது காலம் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது மதுபானம் விற்பனைக்கு  எந்தத் தடையும் இல்லை; பொங்கல் தீபாவளிப் பண்டிகைக்கு தமிழகத்தில்  மதுபான விற்பனை 300 கோடிகளை தொட்டது.

இந்நிலையில் மதுபான விற்பனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தில் மதுபானம் ஆறாக ஓடுவதாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் முலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம், ஆறாக ஓடுகிறது எனக் கூறி தமது வேதனையை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்