என் தந்தை ஒரு போராளி: கமலுடன் பிரச்சாரத்திற்கு சென்ற அக்சரா டுவீட்

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:20 IST)
என் தந்தை ஒரு போராளி: கமலுடன் பிரச்சாரத்திற்கு சென்ற அக்சரா டுவீட்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் தனது டுவிட்டரில் ’என் அப்பா ஒரு போராளி என்றும் போராட்டத்திற்கான வலியை தாங்கிக் கொண்டு போராடுவார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக வேனில் அவருடைய மகள் அக்ஷரா ஹாசனும் சென்று வருவது தற்போது தெரியவந்துள்ளது
 
கமல்ஹாசன் பிரச்சாரம் செல்லும் பிரத்யேக வேனில் அக்சராஹாசன் இருப்பது போன்றும் கமல்ஹாசன் தங்கியிருக்கும் ஹோட்டலில் அக்சராஹாசன் இருப்பது போன்றும் உள்ள புகைப்படத்தை அக்சரா ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்
 
இந்த டுவிட்டில் அவர் ’எனது அப்பா ஒரு போராளி என்றும் போராட்டத்தின் முடிவு வரை ஏற்படக்கூடிய வாங்கிக் கொள்வார் என்றும் கூறியுள்ளார். அக்சராஹாசனி இந்த ட்விட் மற்றும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்