தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி பிரச்சாரத்திற்கு வருவது நல்லதுதான்: ஸ்டாலின்

வியாழன், 1 ஏப்ரல் 2021 (06:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்தோம் 
 
ஏற்கனவே ராகுல்காந்தி, பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன், சீதாராம் யெச்சூரி உள்பட பல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்துள்ளனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவைக்கு வருகை தந்து பிரசாரம் செய்தார் என்பதும் தாராபுரத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரதமரின் வருகை குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவது திமுகவுக்கு தான் நல்லது என்று பேசியுள்ளார்
 
பிரதமரின் வருகையால் அதிமுக பாஜக கூட்டணிக்கு பொதுமக்கள் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் அந்த வெறுப்பு திமுகவுக்கு சாதகம் என்ற ரீதியில் அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு முறை பிரதமர் அலுவலகத்திற்கு வரும்போதும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோபேக்மொடி என்ற ஹாஸ்டல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்