முதல்வர் தலைமையில் மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அடிக்கல் நாட்டுவிழா!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (11:45 IST)
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற துவக்க விழா மதுரையில்    நாளை  நடக்கிறது. இறுதி கட்ட பணிகளை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
 
 
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற துவக்க விழா மதுரையில்    நாளை  (மார்ச் 25ல் ) நடக்கிறது. மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலை 10:35 மணிக்கு விழா துவங்குகிறது.
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,   மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,    உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,   எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆர்.மகாதேவன்,  சுப்பிரமணியன்,  சுரேஷ் குமார் உள்ளிட்ட நீதிபதிகள் பஙகேற்கின்றனர்.
 
தமிழக அமைச்சர்கள் ரகுபதி,    PTR பழனிவேல் தியாகராஜன்,   மூர்த்தி,  தமிழக தலைமைச் செயலர் இறையன்பு,   தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பங்கேற்கின்றனர். 
 
இதற்கான. இதற்கான. இறுதி கட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இந்த இறுதி கட்ட  பணிகளை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன்,  சுரேஷ் குமார்,  மகாதேவன்,  ஆதிகேசவலு,  உள்ளிட்ட நீதிபதிகள்,  ஆய்வு செய்தனர்.
 மதுரை மாவட்ட ஆட்சிய ர் அனீஸ் சேகர்,  மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் கலோன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்