செய்தி கேட்டு வருந்தினேன் - அஜித்தின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (11:37 IST)
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று (மார்ச் 24) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் மனைவியுடன் வசித்து வந்த இருக்கு நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். 
 
இதனால் கண்டா 3 ஆண்டுகாலமாக அவர் தொடர் சிகிச்சை எடுத்துவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை தூக்கத்திலே மரணமடைந்துள்ளார்.  இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், அதன் படி தமிழ முதல்வன் முக ஸ்டாலின், “நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்