கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்த அஜித்!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (20:46 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்தார். அதன் பின்னர் இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு நேற்று சென்னை வந்ததும் கருணாநிதியை சந்தித்தார். 
 
இந்நிலையில், இன்று நடிகர் விஜய் காலை காவேரி மருத்துவமனை சென்றார். அதன் பின் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு மருத்துவமனையின் பின் வாசல் வழியாக சென்று விட்டார்.
 
தற்போது நடிகர் அஜித், காவேரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்