முதல் நபராக வந்து வாக்களித்த அஜித்.. 30 நிமிடங்கள் காத்திருந்து ஜனநாயக கடமை..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:27 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் முதல் நபராக நடிகர் அஜித் வந்து முப்பது நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏழு கட்டங்களாக இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்ட தேர்தல் இன்று 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன் 30 நிமிடங்கள் முன்கூட்டியே வந்து வரிசையில் 30 நிமிடங்கள் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்