ஆதியோகி சிலைக்கு பதில் மீனாட்சி அம்மன் கோவில்: அதிரடி மாற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்தையும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழகத்தின் அடையாளமாக ஆதியோகி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்
ஆதியோகி சிலை தான் தமிழகத்தின் அடையாளமா? பல நூற்றாண்டுகளாக இருக்கும் எத்தனையோ அடையாளம் தமிழகத்தில் இருக்கும் போது நேற்று வந்த ஆதியோகி சிலையை தமிழகத்தின் அடையாளமாக வைப்பது கண்டனத்துக்குரியது என அரசியல் பிரமுகர்கள் குறிப்பிட்டிருந்தனர்
இதனை அடுத்து தற்போது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அந்த புகைப்படத்தை மாற்றியுள்ளது. ஆதியோகி சிலை இதுவரை இருந்த நிலையில் அந்த படத்தை நீக்கி விட்டு தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் புகைப்படத்தை வைத்துள்ளது
மாநிலங்களுக்கான தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழகத்தின் அடையாளமாக ஆதியோகி சிலை வைக்கப்பட்டதற்கு கண்டனங்களை எழுந்ததை அடுத்து தற்போது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படத்தை வைத்ததாக கூறப்படுகிறது