அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி- பாஜக தலைமையிடம் அதிமுக உறுதி!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (13:21 IST)
அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி என்று   பாஜக தலைமையிடம் அதிமுக கூறிவருவதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறிய அண்ணாமலை, பின்னர், முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையை பற்றி கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து, பாஜக தலைவர் அண்ணாமலையை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த நிலையில், அண்ணா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அண்ணாமலை மறுத்த  நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமிக், சிவி சண்முகம், விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அண்ணாமலை பற்றி புகாரளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் டில்லியில் முகாம்.அமித்ஷாவை சந்திக்க  டெல்லியில் காத்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக பாஜக தலைமையிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்

மேலும், பாஜக  மாநில தலைவரை மாற்றினால்தான் கூட்டணி தொடரும் என்று பாஜக மூத்த தலைவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்னும் சற்று நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்திக்கவுள்ள நிலையில்,தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்  உறுதியாக பாஜக தேசிய தலைவர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்