அண்ணாமலை மீது புகாரளிக்க டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர்கள்!

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (20:45 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்னும் சற்று நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர்.

சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறிய அண்ணாமலை, பின்னர், முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையை பற்றி கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து, பாஜக தலைவர் அண்ணாமலையை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த நிலையில், அண்ணா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அண்ணாமலை மறுத்த  நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி, சிவி சண்முகம், விஸ்வ நாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அண்ணாமலை பற்றி புகாரளிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்