குஷ்பு, கெளதமி ஏமாற்றம்: சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதி யாருக்கு?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (19:02 IST)
குஷ்பு, கெளதமி ஏமாற்றம்: சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதி யாருக்கு?
அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியான நிலையில் குஷ்பூ போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கும், கௌதமி போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கும் சென்றுள்ளதால் இருவரும் படு ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் குஷ்பு மற்றும் கௌதமி ஆகிய இருவரும் எந்த தொகுதிகள் போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என குஷ்பு கடந்த சில நாட்களாக அந்த தொகுதியில் தீவிரமாக பணி செய்து கொண்டிருந்தார். அதேபோல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி திட்டமிட்டு திட்டமிட்டு அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார் 
 
இந்த நிலையில் பாமகவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கௌதமி போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்