நூறுநாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டாட்சியரிடம் மனு!

J.Durai
புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:12 IST)
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 
 
நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்,வேலை வழங்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.
 
ஊர்வலத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.‌பின்னர் வட்டாட்சியரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். 
 
இதில் 200 -ற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்