சென்னையில் சம்பள பாக்கி தராததால் வயதான தம்பதியினர் அடித்துக் கொலை

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (11:16 IST)
சென்னையில் சம்பள பாக்கி தராததால் வயதான தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. தம்பதியினரின் இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு டைல்ஸ் ஒட்ட வடமாநில இளைஞரான ஆலனை அணுகியுள்ளனர். மாயாண்டி அவருக்கு முன்பணம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டியுள்ளார் ஆலன்.
 
வேலை முழுமையாக முடிந்த பிறகு ஆலன், மீதிப்பணத்தை மாயாண்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் மாயாண்டி ஆலனிடம், நீ ஒழுங்காகவே டைல்ஸை ஒட்டவில்லை, ஆதலால் உனக்கு பணம் தர முடியாது என கூறியுள்ளார். பல முறை கேட்டும் மாயாண்டி ஆலனுக்கு பணம் தரவில்லை.
 
இதனால் ஆத்திரமடைந்த ஆலன் அவனது கூட்டாளியோடு மாயாண்டியின் வீட்டிற்கு சென்று மாயாண்டியையும் அவரது மனைவியையும் கொன்று விட்டு, வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்திய போலீஸார் ஆலனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்