கடந்த வாரம் 12-ம் தேதி இரவு 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குழு, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்சாவின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ. 2.5 லட்சத்தை கைப்பற்றினர். அப்போது, அந்த அறையில் கமீல் பாட்சாவை சந்திப்பதற்காக கொடுங்கையூரை சேர்ந்த பில்டர் செல்வம் என்பவர் வந்திருந்தார். அவரிடமிருந்து ரூ.2.58 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டட்து. எனவே, மொத்தம் ரூ.5.8 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியது.