அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்த நிலையில் அவரை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து விசாரணை முடிவு பெற்று இன்று காலை 7 மணிக்கு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்முடி மீதான விசாரணைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் 72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல் என்றும் உச்சநீதிமன்ற எச்சரிக்கை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளித்துள்ளது அமலாக்கத்துறை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்க துறை பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் அல்ல என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.