பாஜக - அதிமுக கூட்டணி ரிஜெக்ட்? பொன்னையன் அதிரடி

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (15:45 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் எந்த கட்சி வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற வியூகங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்த வரை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை அதிமுக - பாஜக கூட்டணி வைக்காது என கூறியிருந்தார். 
 
அப்போது அதிமுக அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரையின் கருத்து அவரது சொந்த கருத்து, அதிமுகவின் கருத்து இல்லை என்று தம்பிதுரையின் கருத்தை எதிர்த்து பேசினார். 
இன்று வரை பாகக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிலும், கூட்டணி குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகிவில்லை. இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். 5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த பாஜக இப்போது கிடையாது. இந்த 5 வருடங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட கெடுதல் செய்ததுதான் அதிகம். 
 
அப்படி இருக்கும்போது, அவர்களுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது. அப்படியே கூட்டணி வைத்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே பாஜகவுடன் கூட்டணி சரிவராது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்