கட்சிக்குள் புகைச்சலை உண்டாக்கிய ஈபிஎஸ் - ஓபிஎஸ்!!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (12:42 IST)
தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது அதிமுகவிற்குள்ளேயே அடிருபதியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சியிலிருந்து யாரும் இல்லாமல் மூவரும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
 
அதிமுகவில் இருவருக்கும் அதாவது தம்பிதுரை, கே.பி.முனுசாமி, கூட்டணி கட்சியான தமாகாவில் ஜி.கே.வாசனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக எம்.பி சீட் கேட்டு வந்த தேமுதிகவுக்கு சீட் கொடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது அதிமுகவிற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதாவது, இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எம்பி பதவி வழங்கி இருப்பது தவறான முன் உதாரணம். ஜெயலலிதா, இருந்திருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டார் என புலம்பி வருகின்றனர். 
 
அதேபோல, கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகிய 2 பேரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்பட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்