தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (16:42 IST)
தமிழக முழுவதும் ஜூலை 20ஆம் தேதி அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கலந்து சில நாட்களாக விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தக்காளி விலை 150 ரூபாய் விற்பனையாகி வருவதாகவும் சின்ன வெங்காயம் விலை 200க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாகவும் சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்