கலைஞரைப் புகழ்ந்த ஓ பி எஸ் மகன் – நாடாளுமன்றத்தில் பேச்சு !

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (08:48 IST)
சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான நாடாளுமன்ற பேச்சின் போது ஓ பி ரவீந்தரநாத் தமிழை வளர்க்க கலைஞர் பாடுபட்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள மூன்று சம்ஸ்கிருத நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் மசோதாவை மக்களவையில் கடந்த 12ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது இதற்காக 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்திய மொழிகளுக்கு அனைத்துக்கும் சேர்த்து 13 கோடியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாகப் பேசிய தமிழக திமுக எம்பிக்கள் தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட மேலானது என வாதிட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய அதிமுக எம்.பி.  ஓ பி ரவீந்தரநாத் ‘தமிழைப் போலவே சம்ஸ்கிருதம் ஒரு பழைமையான செவ்வியல் மொழி என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  தமிழக மக்களாகிய நாங்கள் சம்ஸ்கிருதத்தை நேசிக்கிறோம். ஆனால், தமிழை நாங்கள் காதலிக்கிறோம். தமிழை வளர்க்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா மற்றும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கடுமையாகப் பாடுபட்டனர். மத்திய தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மதுரையில் அமைக்க வேண்டும். ஏனெனில் பண்டைய தமிழ்ச் சங்கங்களின் மையமாக மதுரை விளங்கியது. இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்