எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிய அதிமுக அமைச்சர் - களைகட்டிய அதிமுக சாதனை விளக்கக்கூட்டம்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (11:13 IST)
வேலூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் அதிமுக அமைச்சர் வீரமணி மேடையில் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி கூட்டத்தில் இருந்தவர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்.
வேலூரில் அதிமுக சாதனை விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பங்குபெற்றனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற பன்னீர் செல்வம் அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை பற்றி விளக்கினார்.
 
இதனையடுத்து அமைச்சர் வீரமணி எம்.ஜி.ஆரின் நாளை நமதே பாட்டை பாட ஆரம்பித்தார். மேடையிலிருந்தவர்களும் அமைச்சரோடு சேர்ந்து பாட, அந்த கூட்டமே பரவசத்தில் ஆழ்ந்தது. அவர் பாடி முடிக்கும் வரை அனைவரும் எழுந்து நின்று ஜாலியாக பாடினர். வீரமணி பாட அவருக்கு கம்பெனி கொடுக்க தொண்டர்கள் பாட அந்த இடமே களைகட்டியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்