புது ரத்தம் பாய்ச்சுவாரா ரத்த வாரிசு? ஜெ தீபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அதிமுக!!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (09:03 IST)
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஜெ தீபா அதிமுகவில் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை அவர் அதிமுகவில் இணையலாம் என தெரிவித்துள்ளார். 
 
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.  
அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ தீபா தெரிவித்தார்.
 
அதன் பின்னர் நேற்று அரசியலில் இருந்து விலகுவதாக பேஸ்புக் பதிவு ஒன்றை போட்டு பின்னர் அதை நீக்கிவிட்டார். அந்த பதிவில் ஜெ தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம் என குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து பேசியதாவது, அதிமுக வலுவான கோட்டையாக உள்ள நிலையில் தீபா எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டு அதிமுகவில் ஜெ தீபா இணைந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவின் வலுவான கோட்டையை மேலும் வலப்படுத்த ஒத்துழைப்பாரா ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்