அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு: திங்கள் கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (17:26 IST)
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை நீக்கியது செல்லாது என்றும் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பு வந்தது
 
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடிபழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யவுள்ளது.
 
இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக வருமா அல்லது தனி நீதிபதி தீர்ப்பை போலவே இரட்டை நீதிபதி அமர்வின் தீர்ப்பும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்