தங்கத்தின் விலை சமீபகாலமாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.85,000 என்ற நிலையிலும், 29-ம் தேதி ரூ.86,000 என்ற நிலையிலும் இருந்தது. அக்டோபர் 1-ம் தேதி விலை மேலும் உயர்ந்து ரூ.87,000-ஐத் தாண்டியது.
நேற்று முன்தினம் விலை உயர்வில் இருந்த தங்கம், நேற்று காலையில் சற்று குறைந்தது. இருப்பினும், வாங்குவோர் நிம்மதி அடைவதற்குள், மாலையில் மீண்டும் விலை உயர்ந்தது.
காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்திருந்த நிலையில், மாலையில் அதே அளவு ரூ.560 அதிகரித்து, முந்தைய நாளின் விலைக்கே திரும்பியது.
நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.10,950 எனவும், ஒரு சவரன் தங்கம் ரூ.87,600 எனவும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய ஏற்ற இறக்கத்தை தொடர்ந்து, இன்று காலை தங்கத்தின் விலை குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,840 ஆகவும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.86,720 ஆகவும் விற்பனையானது.
இந்த குறைவுக்குப் பிறகு, இன்று மாலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தற்போது, ஒரு கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,900-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.87,200-க்கு விற்பனையாகிறது.
தங்கம் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விலையின் ஏற்ற இறக்கத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.