இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

Siva

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (16:30 IST)
முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண் சிங் விஜயதசமி கொண்டாட்டத்தின்போது "இனிமேல் கல்விக்கான அவசியம் இல்லை. ஏனென்றால், வேலைவாய்ப்பில் உள்ள அனைத்துமே தற்போது அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுவிட்டன," என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது
 
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் இவர் மேலும் கூறியதாவ்து: நான் வாடகை ஹெலிகாப்டரில் வரவில்லை; நானே சொந்தமாக வாங்கிய ஹெலிகாப்டரில் வந்தேன். வெற்றியை அடைய விரும்பினால், எப்போதும் வெற்றிகரமான நபர்களுடன் பழக வேண்டும்’ என்று தெரிவித்தார்.
 
இவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்தபோது, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகாட் உள்ளிட்ட பல முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் இவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்க்கது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்