அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம் – சூடு பிடிக்கும் தேர்தல்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு குறித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் அதிமுக அலுவலகத்தில் பெற்றுக்க்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் போட்டியிட விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக தமிழகத்திற்கு ரூ.15,000, புதுச்சேரி ரூ.5,000 மற்றும் கேரளாவுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்