இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஆவடி தொழிற்சாலையில் தயாரான உள்நாட்டு உற்பத்தியான அர்ஜுன் பீரங்கியை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அர்ஜுன் பீரங்கி இந்திய ராணுவத்தில் முக்கிய பங்களிப்பை செலுத்தும் என கூறப்படுகிறது.