ஆந்திராவில் நடைபெறும் வன்முறைக்கு பாஜக - சந்திரபாபு நாயுடு தான் காரணம்.. ரோஜா எம்.எல்.ஏ

Mahendran
திங்கள், 20 மே 2024 (14:05 IST)
ஆந்திராவில் தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறைக்கு பாஜகவும் சந்திரபாபு நாயுடுவும் தான் காரணம் என நடிகை ரோஜா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திராவில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடும் நடிகர் ரோஜா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார் 
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான நல்லாட்சி நடந்து வருகிறது என்றும் அவர் இரண்டாவது முறையாக முதல்வராக வேண்டும் என்றும் நான் மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதற்காக அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தேன் என்று கூறினார். 
 
மேலும் ஆந்திராவில் தேர்தல் நேரத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்றும் தேவை இல்லாமல் பிரச்சனையை ஏற்படுத்தி கலெக்டர்களை மாற்றி வெற்றி பெறலாம் என்று கனவு காண்கின்றனர் என்றும் ஆனால் பொதுமக்கள் முழுக்க முழுக்க எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள் என்றும் அதனால் மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்