பாண்டேவை கலாய்க்கும் மீம்ஸ் : பாராட்டிய விவேக்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (12:56 IST)
தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவை கலாய்த்து நெட்டிசன்கள் போட்ட மீம்ஸை நடிகர் விவேக் பாராட்டியுள்ளார்.


 

 
ரெமோ பட விழாவில், தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி நடிகர் சிவகார்த்திகேயன் மேடையிலேயே அழுதார். அவரை, தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்கு வரவழைத்து,  அதன் பின்னணி குறித்து விவாதித்தார் ரங்கராஜ் பாண்டே.
 
இதற்கிடையில், நாட்டில் பல பிரச்சனைகள் இருக்க, சிவகார்த்திகேயன் அழுததுதான் முக்கியமா என்று, கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களை உலவ விட்டனர் நெட்டிசன்கள். 
 
அதில் ஒரு மீம்ஸ்தான் நடிகர் விவேக்கை கவர்ந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி விவாதம் பண்ணி இருக்கீங்களா..? உங்களை யெல்லாம் திருத்தவே முடியாதுடா.. என்று ஆதங்கப்பட்டுள்ளார் ஒரு நெட்டிசன். 
 
இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மீம்ஸ் போடும் இளைஞர்களின் நகைச்சுவை கண்டு வியக்கிறேன் என்று விவேக் குறிப்பிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்