தேர்தல் அதிகாரி மாற்றம் ; விஷாலின் ரியாக்‌ஷன் என்ன?

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (17:57 IST)
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் வெற்றி என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பங்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. முக்கியமாக திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
 
அந்நிலையில், வேலுச்சாமிக்கு பதிலாக பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரவீன் நாயர் சென்னை மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் வகிப்பவர் என்பதும், கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, பிரவீன் நாயர்தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விஷால் “ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதை வரவேற்கிறேன். ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் வெற்றியாக இதை கருதுகிறேன். இதன் விளைவாக நேர்மையான தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்.  ஆர்.கே.நகர் மக்களின் சார்பில் நான் தேர்தல் கமிஷனிடம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்