கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு, முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி வதக்கி, அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து, வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.