தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், மதுரையில் நடைபெற்ற தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எடுத்த செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், மாநாட்டில் வெளியிடப்பட்ட பாடல் வரிகளைப் பகிர்ந்து, "தனி ஆள் இல்ல, நான் ஒரு கடல்" என்று குறிப்பிட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
நேற்று மதுரையில் நடைபெற்ற மாநாடு சிறப்பாக நிறைவடைந்தது. அதில், பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய விஜய், "1967 மற்றும் 1977-களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை போல, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் தமிழகத்தில் மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாட்டின் போது, விஜய்யின் குரலில் பாடல் ஒன்றும் வெளியானது. அதை எதிரொலிக்கும் வகையில், அவர் பகிர்ந்துள்ள இந்த செல்ஃபி வீடியோவில், "உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான், உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான், உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.