தினகரனின் அமமுகவில் இருந்து விழுந்த இன்னொரு விக்கெட்!

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (08:09 IST)
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பல பிரபலங்கள் விலகி, மாற்று கட்சியில் இணைந்து உள்ள நிலையில் அந்தக் காட்சியின் கூடாரமே தற்போது காலியாகும் அபாயத்தில் உள்ளது. தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகி விட்டதால் அவர் தொடர்ந்து கட்சியை நடத்துவாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 
இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாமகவில் இருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்த நடிகர் ரஞ்சித், தற்போது அக்கட்சியில் இருந்து  விலக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் ரஞ்சித் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி விரைவில் பாஜகவில் சேருவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் ரஞ்சித் தமிழக பாஜக தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இருப்பினும் ரஞ்சித்தை தனது கட்சியில் இழுக்க திமுகவும் முயற்சி செய்து வருவதாகவும் இது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. எனவே ரஞ்சித் திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் எந்த கட்சியில் இணைவார் என்பதை அவரே இன்னும் ஒருசில நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்