முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் மக்கள் பணியாற்றுவார் : ராதாரவி நம்பிக்கை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (17:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் மக்கள் பணியாற்ற வருவார் என்று நடிகர் ராதாரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 

 
உடல் நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
கடந்த சில நாட்களாக அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபி சிகிச்சை நிபுணர்களும் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.  அவர் விரைவில் நலம் அடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரிக்க, நடிகர் ராதாரவி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “முதல் அமைச்சர் விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்றுவார்” என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்