கொள்ளையடிக்கும் மின்வாரியம்: நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டால் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (08:24 IST)
இந்த கொரோனா காலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின்வாரியம் ரீடிங் கணக்கு எடுக்காமல் தற்போது மொத்தமாக கணக்கெடுப்பு எடுத்து மக்களிடமிருந்து மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக மின்சார கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதமும் அதற்கு முந்தைய மாதமும், முந்தைய மாதக் கட்டணத்தை கட்டும்படி மின் வாரியம் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் அந்த கட்டணத்தை கட்டாவிட்டாலும் மின் துண்டிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து மின்வாரிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாகவும் இது பகல்கொள்ளையாக இருப்பதாகவும் நடிகர் பிரசன்னா கூறியுள்ளார். தனது வீடு எனது தந்தை மற்றும் மாமனார் வீடு ஆகியோருக்கு சேர்த்து இந்த கட்டணம் வந்திருப்பதாகவும் இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
இருப்பினும் இந்த தொகையை தன்னால் கட்ட முடியும் என்றும் ஆனால் இதே நிலைமை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வந்தால் அவர்கள் எப்படி இந்த கட்டணத்தை காட்டுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவின் இந்த கருத்துக்கு பதில் கூறிய மின்வாரியம் பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுத்து பிழை இருந்தால் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. தமிழக அரசின் மின் வாரியம் மீது நடிகர் பிரசன்னா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்