கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிதீஷ் குமார் தலைமையில் உள்ள கட்சி தான் முக்கிய ஆதரவாக இருந்தது என்பதும், அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே என்பவர் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் பங்களிப்பு மிகவும் பெரியது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக அவர் செயல்பட்டு, பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தி வருகிறார்," என தெரிவித்தார்.
மேலும், "என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால், நிதீஷ் குமார் துணை பிரதமராக வேண்டும். பாபு ஜாக் விஜயன் ராம் அவர்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் இன்னொரு துணை பிரதமரை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை," என்றும் அவர் கூறினார்.