பாஜக-வில் நடிகர் நெப்போலின் பதவி பறிப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (10:03 IST)
தமிழக பாஜக-வில் நடிகர் நெப்போலின் வகித்து வந்த துணைத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழக பாஜக-வில் 7௦ பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக பாஜக துணைத் தலைவர்களாக, எம்.ஆர்.காந்தி, எஸ்.சுரேந்திரன், பேகம், குப்புராமு, சுப.நாகராஜன், எம்.சுப்ரமணியன், எஸ்.பி.சரவணன், பி.டி.குமார், எம்.என்.ராஜா, சிவகாமி பரமசிவம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், இளைஞர் அணி தலைவராக வினோஜ் பி.செல்வம், மகளிர் அணி தலைவியாக ஏ.ஆர்.மகாலட்சுமியும்,  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் நெப்போலியன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்