ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த பரிசு

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (09:19 IST)
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4 ஆயிரத்து 600 டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிப்பார்கள். இதற்காக, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை வழங்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமிய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை உடனே வழங்க உத்தரவிட்டார்.
 
வழக்கம் போல், இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க,  4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் தமிழகம் முழுக்க சுமார் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் மூலம் பல லட்சம் இஸ்லாமிய மக்கள் பயன் அடைவர்.
 
இதனால், இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவு அள்ளிக் கொடுத்த பரிசுக்கு நன்றி மறக்காமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்