அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:45 IST)
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஊட்டச்சத்து விவகாரத்தில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன்  கூறினார் 
 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்றும் தற்போது ஊட்டச்சத்து டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் எனவே அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்