மீஞ்சூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து : இருவர் உடல் நசுங்கி பலி

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:52 IST)
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் சரண்ராஜ் இருவரும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு சென்று சப்ளை செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் வழக்கம்போல்  தண்ணீர் விநியோகம் செய்து  விட்டு திரும்பி வந்தபோது பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இரும்பு உருளை லோடு ஏற்றிவந்த லாரி டிராக்டரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.


 

இந்த விபத்தில் சுதாகர் சரண்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் இருவரது உடலைமீட்டு பொன்னேரிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய ஆந்திர மாநில லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவருகின்றனர் .

ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் லாரிமோதி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்