இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கணவர் மற்றும் ஒரு பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற நிலையில், வேளாங்கண்ணி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, இளைஞர்கள் இருவர் வேளாங்கண்ணி வீட்டிலிருந்து வெளியேறியது தெரிந்தது.
போலீஸார் விசாரிக்கையில் அவர்கள் வேளாங்கண்ணியின் தம்பி மகனான அகஸ்டின்(21) மற்றும் அவரது நண்பர் சாலமன்(22) என்ற தகவல் தெரிந்தது. அவர்களிடம் விசாரிக்கையில், தங்கள் ஆசைக்கு இணங்காததால் அத்தையை அடித்துக் கொன்றதாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.