கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை; விரட்டியடிக்க வந்த கும்கி யானை! – பவானிசாகரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (11:00 IST)
பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்த கண்  தெரியாத ஒற்றை காட்டு யானையை பிடிக்க கும்கி யானைகளை வனத்துறையினர்  வரவழைத்துள்ளனர்               


 
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனச்சரகத்துக்குட்பட்ட பவானிசாகர்  அணையின் நீர்த்தேக்க பகுதி வழியாக வந்த ஒற்றை காட்டுயானை அய்யன்பாளையம் கிராத்திற்குள்  நேற்று அதிகாலை  புகுந்தது. அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி வந்தது இதை கண்ட விவசாயிகள் விளாமுன்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்தும், சைரன் வைத்த யானை விரட்டும் வாகனத்தை கொண்டும் யானையை விரட்டியதில் கோபமடைந்த யானை செல்லும் வழியில் அங்கிருந்த வீடுகளையும், விவசாயிகளின் டிராக்டர்களையும் அடித்து சேதப்படுத்தியது.

தொடர்ந்து யானையின் பின்னால் விரட்டி சென்ற வனத்துறை வாகனத்தை திரும்பி வந்து யானை தாக்கியது. இதில் மயிரிழையில் வனத்துறையினர் தப்பினார்கள் நீண்ட போரட்டத்திற்கு பின் வனதுறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிகுள் விரட்டி அடித்தனர். யானை பிடித்து வேறு பகுதியில் கொண்டு விட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்தனர். அதில் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ் என்ற யானை வந்துள்ளது. மற்றொரு யானை இரவு வர உள்ளதாகவும்  இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் ஒற்றை யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் செல்ல உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்