பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 20 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (22:08 IST)
பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில்  கொண்டிருந்தனர்.

அப்போது, கைர்பூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, 30 அடி பள்த்தில் திடிரென்று விழுந்து விபத்தில் சிக்கியது.

அந்த சமயம பார்த்து, அந்த பள்ளத்தில் வெள்ள நீர் இருந்த நிலையில்,  8 பெண்கள், 6 6 சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, இவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, அருகேயுள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இந்த விபத்திற்குக் காரணம், சாலையின் ஓரத்தில் இருந்திய தடுப்புகளை ஓட்டுனர் பார்க்கத் தவறியதால், இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அந்த மாகாணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்