ஹெல்மெட் அணிந்து திருடிய இளம்பெண் : காட்டிக்கொடுத்த மூன்றாம் கண் !

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (16:49 IST)
தலையில் ஹெல்மெட் அணீந்துள்ள இளம்பெண் ஒருவர், சாலையில் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாகூர் மீரான் (65). இவரது உறவினர்கள் பூந்தமல்லியை அடுத்துள்ள கரையான்சாவடியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்துவரும்  தனது உறவினரைப் பார்க்க மதியம் சென்றார். அப்போது மதியம் 2: 30 மணிக்கு கடையில்  வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றனர்.திரும்ப வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை என்று தெரிகிறது இதைஒப் பார்த்து அவர்கல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ப்ல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை.  பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் ஒரு பெண் மதியம் ஹெல்மெட் அணிந்தபடி கையில் பேக்குடன் வந்து நாகூர் மீரானின் பைக்கை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. 
இதனையடுத்து பூந்தமல்லி காவல்நிலையத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை காட்டினர். மேலும் தனது பைக்கை அவர் திருடிச் சென்றதாகவும் புகார் அளித்தார் நாகூர் மீரா. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் பைக்கை திருடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனன்ர்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்