ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை..! விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி திமுக.! இபிஎஸ்

Senthil Velan
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (15:39 IST)
ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை என்றும் கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர் ஆ ராசா என்றும் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஆண்டிமுத்து ராசா வேண்டும் என்றே திட்டமிட்டு எம.ஜி.ஆர் அவர்களை, வாய்கொழுப்பு ஏறி பேசியதாகவும், எம்.ஜி.ஆர் பொதுமக்களுக்காக வாழ்ந்த தலைவர் எனவும் தெரிவித்தார்.

ஆ.ராசாவின் பேச்சு எம்.ஜி.ஆர் அனுதாபிகள், தொண்டர்கள் மனதை வேதனையடைய செய்துள்ளது என்றும் ஆ.ராசாவிற்கு நாவடக்கம் தேவை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
 
அனைவரையும் வாழ வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என குறிப்பிட்ட அவர்,  கருணாநிதி குடும்பம் கடனில் தத்ததளித்து கொண்டு இருந்த போது, அவரது குடும்பத்தினருக்காக சம்பளம் வாங்காமல்  நடித்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என கூறினார்.
 
மரியாதை இழந்த மனிதர் ஆ.ராசா என்றும் ஆ.ராசா எப்பேர் பட்டவர் என்றால், கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர் என்றும் விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி திமுக. எம்.ஜ.ஆரை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ALSO READ: காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள்.. மக்களவையில் பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்..! எதிர்க்கட்சிகள் அமளி..!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவார் என்றும் எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை குவிக்க உழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்