கரூரில் அதிகரிக்கும் மணற்கொள்ளை ...

திங்கள், 11 செப்டம்பர் 2023 (20:25 IST)
கரூரில் ராட்சித இயந்திரங்களை கொண்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தொடரும் மணற்கொள்ளை ! சோதனை சாவடிகளில் கூட மணற்கொள்ளைக்கு உடந்தையாக குவாரியில் பணியாற்றும் நபர்களை வைத்துள்ள அவலநிலை !
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் மணற்குவாரிக்கு மணல் எடுக்கப்பட்டு வருகின்றது. பசுமைத்தீர்ப்பாயத்தின் அறிவுரையை மதிக்காமல், காவிரி ஆற்றில் நீர் செல்லும் இடத்தில் மணற்திட்டுக்களை, மணலை கொண்டு மணல்சுவர் போல் அமைத்து அதன் மூலம் நீர் வரமால் தடுத்து மணல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் கொண்டு ராட்சித இயந்திரங்கள் இரண்டிற்கும் மேல் வைத்து பல அடி தூரம் மணல் அள்ளப்பட்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க, இங்கிருந்தே, கணபதிபாளையம் மற்றும் நன்னியூர் ஆகிய இரண்டு ஸ்டாக் பாயிண்டுக்களுக்கு மணல் ராட்சித லாரிகளால் கொண்டு செல்லப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல், எங்கேயும் நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை படி கேமிரா இல்லை, மணல்குவாரிகளும், மணல் அள்ளும் இடங்களுக்கு மணல் அள்ளுபவர்களே கூலியாட்களை கையில், கம்பு, பிரம்புகள் கொண்டு ஆங்காங்கே 100 அடி தூரத்திற்கு ஒருவரை கண்காணிக்க வைத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், வாங்கல் காவிரி ஆற்றுப்பாலத்தில், சோதனை செய்யும் சாவடி தற்போது செயல்படாத நிலையில், அங்கேயும் மணல் எடுப்பவர்களின் ஆட்கள் தான், அந்த பணிக்கு டிராபிக் என்று கூறப்படுகின்றது.

இதை விட, மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் லாரிகள் சென்று வருவதால் புழுதி பரக்காமல் இருக்க, டிராக்டரில் தண்ணீர் கொண்டு சாலைக்கு தண்ணீர் தெளிக்கும் பணி தான் இதில் முக்கிய கூடுதல் அம்சமாகும், இந்த பகுதிகளை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் இன்றும் குடிநீர் பஞ்சம், குடிநீர் தட்டுப்பாடுகள் அரங்கேறிய நிலையில், அந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்கு அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் இதுவரை ஒன்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பகுதியின் சாலைகளை குளிர்விக்கவும், (ஏனென்றால் லாரிகளின் டயர்கள் வெப்பம் ஆகாமல் இருக்க ) புழுதிகள் பறக்காமல் இருக்க சாலைகள் தோறும் காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் டிராக்டர்கள் கொண்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகின்றது.

பசுமைத்தீர்ப்பாய உத்திரவினை மீறியும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்திரவினை காற்றில் பறக்க வைத்தும் இந்த சட்டவிரோதமாக நடத்தும் மணல்குவாரிக்கு சமூக நல ஆர்வலர்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு மற்றும் பசுமைத்தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நல்லது நடக்கும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்