சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை: பெரும் பரபரப்பு..!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:15 IST)
சென்னை கரூர் உள்பட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
அதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னை முகப்போர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
 
 ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்