கமல், ரஜினியின் அரசியல் மோசடி: அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் அறிக்கை

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (16:51 IST)
தமிழக அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்களின் மறைவுக்குப்பின் தற்போது கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவர் அரசியலுக்கு வந்துள்ளனர். இருவரின் அரசியலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி இது குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
பொருள்‌ ; பொதுக்குழு கூட்டம்‌ மற்றும்‌ கமல்‌, ரஜினி அரசியலுக்கு எம்‌.ஜி.ஆர்‌ பெயர்‌ சொல்லி வருவது மோசடி என்ற விளக்கம்‌ தெளிவாக தரப்படும்‌.
 
பெருமதிப்பிற்குரிய பத்திரிக்கை, ஊடக இணையதள நண்பர்களுக்கு வணக்கம்‌. எங்களது கழகத்தின்‌ பொதுக்குழு கூட்டம்‌ 29.12 3200 அண்று காலை 10.30 மணியளவில்‌ சிகரம்‌ டவர்‌, குமரன்‌ காலனி பிரதானசாலை வடபழனி சென்னை-26 என்ற முகவரியில்‌ நடைபெற உள்ளது.
 
கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் அடங்கிய புத்தகமும் வெளியிட உள்ளோம். இதுவரை யாரும்‌ செய்யாத மக்கள்‌ நலத்திட்டங்கள் அடங்கியுள்ள இதை பொதுமக்கள்‌ மத்தியில்‌ கொண்டு செல்ல உங்கள்‌ மேலான உதவியை நாடுகிறேன்‌.
 
எனவே தயவு செய்து அருள்‌ கூர்ந்து தங்கள்‌ நிருபரை அனுப்பி செய்தி 'சேகரித்திடுமாறு பணிந்து வேண்டுகின்றேன்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்