கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி? கமல் பதில்!

திங்கள், 28 டிசம்பர் 2020 (11:34 IST)
கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி? என கமலிடம் கேள்வி எழுப்பட்டது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் முன்னதாக ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் முன்னதாக பேசியிருந்த கமல்ஹாசன், தேர்தலில் ரஜினியின் ஆதரவை கோருவோம் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது உடல்நல குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். அவர் தீவிர ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
இதனிடையே செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி? என கேள்வி எழுப்பட்டது. இதற்கு கமல், 40 ஆண்டுகால நண்பருக்கு முதலில் உடல்நலம் முக்கியம். பிறகு அவர் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்